Tuesday, July 8, 2014

மகாநாயக்க தேரர்களை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளது பொதுபல சேனா

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான அவ் அமைப்பின் உறுப்பினர்கள் அடுத்த வாரம் மகாநாயக்க 
தேரர்களை சந்திக்கவுள்ளனர்.
 
அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பாக தெளிவு படுத்துவதற்காகவே மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது 
 
அங்கிரிய, மல்வத்தை உட்பட அனைத்து மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து அளுத்கம, பேருவளை சம்பவங்களின் பின்னணி  மற்றும் அதன் உண்மையான நிலைவரங்கள் தொடர்பாகவும் நாட்டிற்குள் இயங்கி வரும் பல்வேறுபட்ட அடிப்படைவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவுள்ளோம்.
 
அத்தோடு, பெளத்த குருமார் மற்றும் சிங்கள பெளத்த மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை வெளிப்படுத்தும் அமைப்புக்கள் எதிர்நோக்கும் சவால்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் இதன் போது எடுத்துக்கூறவுள்ளோம்.
 
மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது
Disqus Comments