Monday, July 14, 2014

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ஜெயவர்தன ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் ஓய்வு பெறுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி அஷ்லித சில்வா தெரிவித்தார்.
கடந்த 18 வருடங்களாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளதாகவும் இது எவராலும் நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்லவென மஹேல ஐயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒருநாள் அணிக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக மஹேல மேலும் தெரிவித்துள்ளார்.
Disqus Comments