உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் 2014 இன் சம்பியன் பட்டத்தை ஜேர்மனி
அணி கைப்பற்றியுள்ளது. நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியன் பட்டத்தை
கைப்பற்றியள்ளது.
ஆர்ஜன்டீனா, ஜேர்மனி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல்
90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. மேலதிக
நேரத்தில் 113ஆவது நிமிடத்தில் மரியா கொட்ஷே அடித்த கோல் மூலம் ஜேர்மனி
இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டது.





