Sunday, July 13, 2014

2022 ஆம் ஆண்டு வரை மஹிந்தவே ஆட்சி தலைவராக விளங்குவார் :கெஹெலிய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்  ஷ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை நமது நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்குவார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கடுகண்ணாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
 
தற்போது ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். இத் தேர்தலில் அரசி வெற்றி பெறுவது உறுதியாகும்.
இத் தேர்தல் முடிந்த பின்னர் சில மாதங்களில் ஏதாவது ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது.
 
இது குறித்து நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன். அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கே செல்ல வேண்டும். 2022 ஆண்டு வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என்றார்.
 
Disqus Comments