Saturday, July 19, 2014

சைபீரியாவில் திடீரென தோன்றிய உலகை உலுக்கும் ராட்சத பள்ளம்: பீதியில் மக்கள் (வீடியோ இணைப்பு)

 சைபீரியாவில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது.

இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே உலகின் கடைசி பகுதி என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் இங்கு கடந்த சில தினங்களுக்கும் முன்னர் 260 மீற்றர் அகலத்துடன் மிகப்பெரிய ராட்சத பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.ஆனால் இதன் ஆழம் குறித்து சரியாக தெரியவில்லை.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது என்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளம் ஏற்பட காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதன் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். மேலும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் தொடக்கம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Disqus Comments