Monday, July 7, 2014

விளக்கு மறியலில் வைக்கப்பட்ட வட்டரக்க தேரருக்கு பிணை


பொலிஸாரை ஏமாற்றுவதற்காக பொய் முறைப்பாட்டை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரான வட்டரக்க விஜித்த தேரரை, பிணையில் விடுவிக்குமாறு பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.

10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில். எனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனுவும் தான் நிரபராதி எனவும் வட்டரக்க விஜித்த தேரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்
Disqus Comments