Monday, July 14, 2014

எதுக்கு எல்லாம் சட்டம். வெற்றிலையை குதப்பி பொது இடங்களில் துப்புவது குற்றம்

வெற்றிலையை குதப்பி பொது இடங்களில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதான வீதிகளில் மாடுகளை விடுவோருக்கும் வீதியோரங்களில் அவற்றை குளிப்பாட்டுவோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் வீதியோரங்களில் வாகனங்களை கழுவுவது, சீமெந்து குழைப்பது, நெல் உலர்த்துவது ஆகியன குற்றங்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments