119 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு நாளாந்தம் 7,000 தொலைபேசி அழைப்புக்கள் கிடைப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இந்த அழைப்புக்களில் 30 வீதமானவை போலியானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறியளவிலான
குடும்ப பிரச்சினைகள், வாக்குவாதம் என்பன தொடர்பிலும், இந்த இலக்கத்திற்கு
தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
குற்றச்
செயல்கள், அனர்த்தம் மற்றும் அபாயம் போன்ற அவசர நிலைமைகளின் போது, தகவல்
தெரிவிப்பதற்காகவே இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அஜித் ரோஹண
குறிப்பிட்டார்.
இந்த இலக்கத்திற்கு போலியான அழைப்புக்களை
ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
