Thursday, July 10, 2014

பாப்பரசரை அழைத்து அவரை ஞான­சார தேரர் மூலம் அவ­மா­னப்­ப­டுத்த அரசாங்கம் திட்டம்

கடந்த தேர்­தலின் போது தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக   இன­வாத தீயை தூண்டி விட்டு வளர்த்து  யுத்­தத்­திலும், தேர்­த­லிலும் வெற்றி பெற்ற இந்த அர­சாங்கம், எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் மத­வாத தீயை தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்­துள்­ளது. இந்த திட்­டத்­துக்கு பொது­பல சேனா பொது­ செ­ய­லாளர் ஞான­சார தேரர் பயன்­ப­டுத்­த­ப­டு­கிறார் என்று ஜன­நாயக மக்கள் முன்­னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
இந்­நோக்கில் இஸ்­லா­மிய மதத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக கல­வரம் செய்­தார்கள். நரேந்­திர மோடியை உட­ன­டி­யாக ஆத்­தி­ர­ப்ப­டுத்த விரும்­பா­ததால், உட­ன­டி­யாக இந்து மதத்­த­வர்­களை எதிர்க்கும் திட்டம் பின்­போ­டப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இவர்­க­ளது அடுத்த குறி, இப்­போது கத்­தோ­லிக்க மதத்­த­வர்­களின் பக்கம் திரும்­பி­யுள்­ளது. இந்­நோக்கில் இன்று ஞான­சாரர் கத்­தோ­லிக்­கர்­களுக்கு எதி­ராக புதிய ஒரு மத­வாத போர்­மு­னையை உரு­வாக்க முயல்­கிறார்  என்று  மனோ கணேசன்  மேலும் தெரிவித்தார்.
 
இந்த அடிப்­ப­டை­யி­லேயே பாப்பரசரை அழைத்து ஞான­சார தேரர் மூலம் அவ­ரையும் அவ­மா­னப்­ப­டுத்த இந்த அரசு திட்டம் தீட்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மா­கவே போர்த்­து­கீ­சி­யர்கள் கால­னித்­துவ ஆட்சி காலத்தில் உடைத்­த­தாக சொல்­லப்­படும் பெளத்த விகா­ரைகள் தொடர்பில்  பாப்பரசர் மன் னிப்பு  கேட்க வேண்டும் என ஞான­சார தேரர் இப்­போது சொல்ல தொடங்­கி­யுள்ளார்.
 
சிறு­பான்மை இன, மதத்­த­வர்­களின் வாக்­குகள் தனக்கு ஒரு­போதும் கிடைக்­காது என்­பதால் முழுக்க, முழுக்க சிங்­கள பெளத்த மத­வா­தத்தை தூண்­டி­விட்டு பெரும்­பான்மை இனத்தின் வாக்­கு­களை முழு­மை­யாக கவ­ரு­வதே இந்த அர­சாங்­கத்தின் எதிர்­வரும் தேர்தல் பிரசார நோக்­க­மாக இருக்கப் போகி­றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதி­கா­ரத்தை  பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்­கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு சிங்­கள, தமிழ் மொழி­களில் உரை­யாற்­றிய மனோ கணேசன் மேலும் கூறி­ய­தா­வது,
 
இவர்­க­ளுக்கு  ஒன்று சொல்ல விரும்­பு­கிறேன்.  இந்த நாட்டில் இன்று கத்­தோ­லிக்கமதமும், கிறிஸ்­தவ முறை­மையும் உள்­நாட்டு மத மார்க்­க­மாக மாறி­விட்­டன. பேராயர் மல்கம் ரஞ்சித்  மற்றும் ராயப்பு ஜோசப் ஆகியோர் போர்த்­து­கீ­சி­யர்­களோ, டச்சுக்­கா­ரர்­களோ, ஆங்­கி­லே­யர்­களோ அல்ல. அவர்கள் இலங்­கை­யர்கள். பெளத்த,இந்து, இஸ்­லா­மிய மதங்­க­ளுடன் கத்­தோ­லிக்­கமும் இந்­நாட்டு மக்­களின் மதங்கள். இதைஇனி எவரும் மாற்­றி­ய­மைக்க முடி­யாது. கால­னி­யா­திக்­க­வா­திகள் இந்த நாட்டில் பெளத்த விகா­ரை­களை மாத்­திரம் உடைக்­க­வில்லை. இந்து ஆல­யங்­க­ளையும் உடைத்­தார்கள்.
 
திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம் ஆகி­ய­வையும் உடைப்­புக்கு உள்­ளா­யின. ஆனால், நானூறு, ஐந்­நூறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்­வு­க­ளுக்கு இன்று இலங்­கையில் வாழும் கத்­தோ­லிக்­கர்­களை அவ­மா­னப்­ப­டுத்­து­வது நியா­ய­மில்லை. பாப்பரசரை கேவ­லப்­ப­டுத்­து­வது முறை­யில்லை. முதலில் இந்த ஞான­சாரர், தாம் இந்த நாட்டில் எத்­தனை பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
 
பாப்பரசரை உலகம் முழுக்க வாழும் கத்­தோ­லிக்­கர்கள் தம் வழி­காட்டி தலை­வ­ராக கரு­து­கி­றார்கள். கிறிஸ்­தவ பிரி­வி­னரும் மதிக்­கின்­றார்கள். ஏனைய மதத்­த­வர்­களும் மதிக்­கின்­றார்கள். அத்­த­கைய மதத்­த­லை­வரை இங்கே வருகை தரும்­படி இந்த அரசு அழைத்­துள்­ளது. அவரை அழைத்து, அவ­ரிடம் கேள்வி எழுப்பி, அவ­ருக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்து,  அவ­மா­னப்­ப­டுத்­து­வது இவர்­களின் திட்டம். அதன்­மூலம் பெளத்த மத­வா­தத்தை தூண்­டி­விட்டு, சிங்­கள பெளத்­தர்­களின் ஒரே ஏக தலை­வர்கள் தாங்­களே என்ற  கருத்தை உரு­வாக்­கு­வது இவர்­களின் புது திட்டம்.
 
இன்று இங்கே வந்த தென்­னா­பி­ரிக்க பதில்  ஜனா­தி­பதி ரம­போ­ஷாவின்  தூதுக்­கு­ழுவை அழைத்­தது இந்த அர­சாங்­கம்தான்.  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் அவர்­களை வர­வேற்­றது, அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா  ஆவார்.
 
விமா­னத்தில் இருந்து இறங்கி இலங்கை மண்ணில் காலடி வைத்­ததும் ரம­போஷா, நிமல் சிறி­பால டி சில்­வா­விடம் சொன்ன வார்த்­தைகள்  என்ன? "உங்­களை மீண்டும் சந்­தித்­ததில் மகிழ்­கிறேன்" என்று சொன்னார். அதன் அர்த்தம் இவர்கள் அங்கே போய் அவரை இங்கே  வருக என அழைத்­துள்­ளார்கள்.
 
இப்­போது அழைப்பை ஏற்று வந்­த­வர்­களை, விமல் வீர­வன்ச, பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, ஞான­சார தேரர், குண­தாச அம­ர­சே­கர ஆகி­யோரை கொண்டு அவ­மா­னப்­ப­டுத்­து­கி­றார்கள். அதா­வது வெளி­நாட்­டுக்­கா­ரர்­களை நாட்­டுக்கு அழைத்து வந்து அவ­மா­னப்­ப­டுத்­து­வது மஹிந்த அர­சாங்­கத்தின் வெளி­நாட்டு  கொள்கை.   இதையே இப்­போது புனித பாப்பரசரின் விட­யத்­திலும் மகிந்த அரசு செய்ய முயல்­கி­றது. இவர்­க­ளுக்கு வெள்ளை தோல், கருப்பு தோல் என்று வெளி­நாட்­டு­கா­ரர்கள்  எவ­ரை­யுமே பிடிக்­காது. சிங்­கள, பெளத்தம் தவிர எந்த ஒரு இனமும், மொழியும், மதமும் இந்த நாட்டில் இருக்க கூடாது என்ற பைத்­தியம் பிடித்­தாட்­டு­கி­றது.  ஆனால்,உலகம் இனி­மேலும் இவர்­களை கணக்கில் எடுக்க தயார் இல்லை. ஒருபுறம், சர்வதேச விசாரணை குழு வந்து நிற்கிறது. மறுபுறம், அரசியல் தீர்வுக்காக ரமபோஷா குழு வந்து நிற்கிறது.
 
அரசில் உள்ள இனவாதிகள் எவ்வளவுதான் கூச்சல்  எழுப்பினாலும், பதவி சுகங்களு க்காக அரசில் உள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் எவ்வளவுதான் அரசின் அழுக்கை கழுவி குடித்தாலும், இந்த ஆட்சியின் நாட்கள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இவர்களின் கழுத்தில் சுருக்கு கயிறு மெல்ல,மெல்ல இறுகுகிறது.  
Disqus Comments