சட்டத்தரணிகளை அச்சுறுத்துவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு கோட்டை நீதவான் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

இனிமேலும் இது போன்ற செயற்பாடுகள் நடக்குமிடத்து கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என விஜித தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மைத்ரி குணரட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார எவ்வளவு தடைகள் வந்தாலும் எத்தனை நீதி மன்றங்களில் ஏறினாலும் குர் ஆனை விமர்சிப்பதை நிறுத்தப் போவதில்லை எனக் கூறினார்.