Sunday, July 6, 2014

ஜோர்தானில் உள்ள மனைவியை வரவழைக்குமாறு குழந்தைகளுடன் கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்

ஜோர்தானில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்துவருமாறு வலியுறுத்தி, கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில், அப்பெண்ணின் கணவர், தனது இரு குழந்தைகளுடன் 80 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரமொன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றார்.
மனைவியின் புடவையில் தனது இரண்டரை வயது குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டும் 6 வயது குழந்தையை தனது தோலில் சுமந்துகொண்டும் மேற்படி நபர் 80 அடி உயரமான கோபுரத்தில் ஏறியுள்ளார்.

சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸார் அவர்களை மிகவும் தந்திரமான முறையில் கீழே இறக்கியுள்ளனர்
Disqus Comments