
இறக்குவாணை பொத்துபிட்டிய அருக்கொட பகுதியில் நீர் தாங்கிக்குள் விழுந்த 2 1/2 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
கம்வெத்த ஆராச்சிலாகே சலனி (06 வயது) என்ற பிள்ளையே இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக இறக்குவாணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரன் நீர் தாங்கியினுள் இறங்கி குளிப்பதை அவதானித்த குறித்த பிள்ளையும் அந்நீர் தாங்கியினுள் இறங்கிய போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.