Sunday, July 6, 2014

பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு முக்­கிய நகரில் பாலம் ஒன்று திடீ­ரென இடிந்து விழுந்­ததால் ஏற்­பட்ட விபத்தில் 2 பேர் பலி­யா­கினர். மேலும் 19 பேர் படு­காயம் அடைந்து உயி­ருக்கு போரா­டிய நிலையில் மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இத­னி­டையே, பிரேசில் நாட்டில் உல­கக்­கோப்பை கால்­பந்து நடப்­ப­தை­யொட்டி அங்கு போக்­கு­வ­ரத்து நெருக்­க­டியை தவிர்க்க பல புதிய பாலங்கள் கட்­டப்­பட்­டன. அப்­படி கட்­டப்­பட்ட பாலங்­களில் ஒன்­றான மேம்­பாலம் தான் இவ்­வாறு திடீ­ரென இடிந்து விழுந்­துள்­ளது.
 
 
இந்த மேம்­பா­லத்தின் மேலும், பாலத்தின் கீழும் நேற்று முன்­தினம் பர­ப­ரப்­பாக வாக­னங்கள் சென்று கொண்­டி­ருக்­கும்­போது மாலை 3 மணி­ய­ளவில் திடீ­ரென இடிந்து விழுந்­துள்­ளது. இடிந்த பாலத்தின் இடி­பா­டு­க­ளுக்கு இடையே ஒரு பள்ளி பேருந்து உள்­பட பல வாக­னங்கள் சிக்­கிக்­கொண்­டன. அந்த இடமே பெரும் பர­ப­ரப்பு அடைந்­தது.

மீட்­புக்­கு­ழு­வினர் உடனே வர­வ­ழைக்­கப்­பட்டு இடி­பா­டு­களில் சிக்­கி­ய­வர்­களை மீட்கும் பணி தீவி­ர­மாக நடந்­தது. இது­வரை இரண்டு பேர் பலி­யா­ன­தாக தக­வல்கள் வந்­துள்­ளன. ஆனால் பலி எண்­ணிக்கை இன்னும் உய­ரக்­கூடும் என அஞ்­சப்­ப­டு­கி­றது. இந்த பாலம் இடிந்து விழும் அதிர்ச்சி காட்சி அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.




Disqus Comments