Saturday, July 12, 2014

கிலாபத்தை பிரகடனம் செய்துள்ள ISIS யார்.?????

(றவூப் ஸெய்ன்) ராக்கில் கிலாபத்தை பிரகடனம் செய்துள்ள ISIS அமைப்பின் மீது மீளவும் உலகக் கவனம் திரும்பியுள்ளது. ஈராக்கின் தியலா முதல் சிரியாவின் எலப்போ வரையும் இஸ்லாமிய கிலாபத்தை பிரகடனம் செய் துள்ளதாக இவ்வியக்கம் தெரி வித்துள்ளது. தற்போது அதன் பெயர் ஈராக்கிலும் ஷாமிலும் இஸ்லாமிய அரசு (ISIS) என்பதிலிருந்து கிலாபத் இயக்கம் என மாற்றம் பெற்றுள்ளது. கலீபா வாக அதன் தலைவர் அபூபக்ர் அல் பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள், அமீரகங்கள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தினதும் சட்டத் தன்மை கிலாபத் பிரகடனம் மூலம் ரத்துச் செய்யப்பட் டுள்ளதாகவும், அனைத்து பகுதி களிலும் கலீபாவின் அதிகாரமே இதன் பின்னர் செயல்படும் எனவும் இயக்கத்தின் பேச்சாளர் அபூ முஹம்மத் அத்னானி தெரி வித்துள்ளார்.

“நீங்கள் உங்கள் கலீபாவுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் கிலாபத்திற்கு ஆதரவளியுங்கள்” என அவர் வேண்டியுள்ளார்.

சிரியாவின் போர்க் களத்தி லிருந்து திடீரென ஈராக்கிய நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய இவ்வமைப்பு, கிலாபத்தைப் பிரகடனம் செய்துள்ளமை ஒரு புறம் வேடிக்கையானதாக இருப்பினும் பிராந்தியத்தில் பெரும் பதட்டத்தையும் அதிர்ச்சி யையும் உருவாக்கியுள்ளது.

இவ்வியக்கத்தின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்? அதன் உண்மையான பின்புலம் என்ன என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கின்ற நிலையில், பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ISIS இன் திடீர் தோற்றமும் மிக வேகமான பாய்ச்சலும் அதன் பின்னணியில் பலமான சக்திகள் இயங்குகின்றன என் பதை மாத்திரம் தெளிவாக்குகின்றது.

உலக ஊடகங்களில் ISIS என்பது ஒரு சுன்னி இராணுவ இயக்கம் எனவும், மத்திய கிழக் கில் கிலாபத்தை நிறுவுவதற்குப் போராடுகின்ற அமைப்பு என வும் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. இவ்வியக்கத்தின் பாய்ச்சல் பல உடனடி விளைவுகளை உருவாக்கியுள்ளது. ஒபாமா மேலும் 200 படைத் தளபதிகளை பக்தாதிற்கு அனுப்பியுள்ளார். அதற்கு மேலாக இரா ணுவ ஹெலிகொப்டர்கள் மற்றும் போர் விமானங்களையும் வொஷிங்டன் அனுப்பி வருகின்றது. ஏற்கனவே 300 இராணுவத் தளபதிகள் பக்தாதிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நடவடிக் கைகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி ஸிஸ் தானியின் பகிரங்க அழைப்பின் பெயரில் பல்லாயிரக் கணக்கான ஷீஆ தன்னார்வத் தொண்டர்கள் ஈராக்கின் ஷீஆ அரச படையின ரோடு இணைந்துள்ளனர்.

இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக ஏற்கனவே நூரி மாலிகியின் அரச பயங்கரவாத செயல்பாடுகளால் அச்சத்தில் உறைந்துபோயுள்ள பக்தாதிலும் அன்பார் மாகாணத்திலும் வாழும் சுன்னி முஸ்லிம்கள் பெரும் பதட்டமடைந்துள்ளனர். பெருமளவிலானவர்கள் தலை நகரிலிருந்து வெளியேறிச் செல் கின்றனர். ஈராக்கை விட்டே வெளிநாடுகளுக்கு இடம்பெய ரும் சுன்னி முஸ்லிம்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஈராக்கின் சுன்னி முஸ்லிம்களது போராட்டத்தை பாதிக்கும் வகையிலும் அவர் களது அச்சத்தை அதிகரிக்கும் வகையிலுமே ஐகுஐகு இன் நகர்வுகள் அமைந்துள்ளன. இவ்வாறான ஒரு இயக்கத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் யார் என்பது பற்றி மிக ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. இது குறித்து பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

1. ஈரான் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என சிலர் வாதிக்கின்றனர். ஏனெனில், ஆயுத பலமுள்ள ஒரு அரசாங் கமே இத்தகைய இயக்கமொன் றை வழிநடத்தலாம். ஆனால், இவ்வாதத்தை ஏற்றுக் கொள் வதில் தர்க்க ரீதியான சில கார ணிகள் தடையாக உள்ளன. ஏற் கனவே, ஈராக் ஷீஆ அரசாங்கத் தினால் ஆழப்படுகின்றது. நாட்டின் பெரும்பகுதி மக்கள் ஷீஆக்கள் எனவும் கூறப்படுகின்றது.

ஈராக்கின் ஷீஆ அரசாங்கம் முற்றிலும் ஈரானின் கட்டுப்பாட் டில் உள்ளது.
தற்போது ISIS இன் மீதான பதில் தாக்குதலுக்கு ஈரானும் தயாராகி வருகிறது. இந் நிலையில் ஈரான் இவ்வியக்கத்திற்குப் பின்னணியில் இருக்கும் என ஊகிப்பது சற்று கடினமாகவே உள்ளது.
 2. அறபு நாடுகள் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என வும் ஊகிக்க முடியாதுள்ளது. ஏனெனில், இவ்வளவு பலமான ஆயுதக் குழுவொன்றை பின் புலத்திலிருந்து இயக்கும் தேவையோ ஆற்றலோ எந்த அறபு நாட்டுக்கும் இல்லை.

3. கிலாபத் சிந்தனையைப் பிரச்சாரம் செய்து வரும், தகி யுத்தீன் நப்ஹானி என்பவ ரால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்கம் இதன் பின்ன ணியில் இருக்கலாம் என சந் தேகிப்பதும் பொருத்தமற்ற தாகவே தோன்றுகிறது. ஏனெ னில், அதன் பிறப்பிடமான உஸ் பெகிஸ்தானிலேயே அது இன் னும் பலமானதொரு ஆயுத அமைப்பாக வளர்ச்சியடைய வில்லை. அவ்வாறிருக்கையில் ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற கிலா பத் சிந்த னையை மாத்திரம் பேசி வரும் இயக்கமே இதன் பின்ன ணியில் இருக்கிறது என ஊகிப்பதும் கடினமாகும்.

4. அநேகமான மேற்கு ஊட கங்கள் சிரியாவில் போராடி வந்த அல்காயிதா இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற ஓர் இயக்கமே ISIS என எழுதி வருகின்றன. ஐமன் ழவாஹிருக்குப் போட்டி யாகவே அபூபக்ர் அல் பக்தாதி செயற்பட்டு வந்தார். விளைவாக அல் காயிதாவில் ஏற்பட்ட பிளவு ISIS இன் உருவாக்கத்தின் மூல காரணம் என அவை எழுது கின்றன. இதன் மூலம் இவ் வமைப்பு முற்றிலும் சுன்னி சமூகத்தைச் சார்ந்தது என நிறுவ முனைகின்றன. இவ்விரு தலை வர்களுக்கும் இடையிலான போட்டி குறித்து அதன் உறுப் பினர்கள் தெரிவித்த கருத்துக் களை மேற்கு ஊடகங்கள் பல மேற்கோள் காட்டியுள்ளன.

5. இவ்வமைப்பின் வேகமான பாய்ச்சலையும் வீச்செல் லையையும் நோக்கும்போது, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே அதன் பின்னணியில் இருக்க முடியும் என ஊகிக்க லாம். ஏனெனில், அதன் நகர்வுகள் குறித்து ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ள எதிர்வுகூறல்களை அவ்வியக்கத்தின் நட வடிக்கைகளோடு பொருத்திப் பார்க்கும்போது இவ்வாறான பலமான ஊகமொன்று உருவாகின்றது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களைக் களமிறக்கிய அமெ ரிக்கா, இஸ்லாமிய அரசொன் றின் விகாரமான தோற்றத்தை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட விளைந்தது. இதனை தாலிபான்கள் கூட அறிந்திருக்க வாய்ப் பில்லை. இஸ்லாமிய அரசு குறித்த பிழையான காட்சிப் புலமொன்றை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்களவு வொஷிங்டன் வெற்றியும் பெற்றது.

அறபு வசந்தத்தை தோல்வியடையச் செய்ய பெரும் சூழ்ச் சித் திட்டத்தில் இறங்கிய வொஷிங்டன், தற்போது அது தோல்வி கண்டு விட்டதாகவே பிரச்சாரம் செய்து வருகின்றது. இப்போது இஸ்லாமிய கிலாபத் பற்றிய ஒரு விகாரமான வெறுக் கத்தக்க தோற்றத்தை உருவாக்க விளைகிறது.

ISIS இன் தலைவர் அபூ பக்கர் பக்தாதி உள்ளிட்ட அவரது சகாக் கள் கூட அறியாத மூலங்களிலிருந்து ஆயுதங்களையும் பண பலத்தையும் பெற்று வரலாம். இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில் களத்தில் குதித்துள்ள ஆயுதக் குழுக்களின் பின்னணி யில் இத்தகைய ஒரு சோக வரலாறு உள்ளது.
சர்வதேச அரசியல் நகர்வு களை இலகுவில் புரிந்துகொள் ளாத வகையில் மிகச் சிக்கலான புதிர்களால் நிரப்பி வைத்துள்ளது வொஷிங்டன். அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் நலன்களே அங்கு முன்னிலைப் படுத் தப்படுகின்றன. அத்தகைய தோர் சர்வதேச விவகாரமாகவே ISIS பற்றிய புரிதலும் அமைந் துள்ளது.

மர்மங்களை மறைத்து வைத் திருக்கும் சத்தாமுக்குப் பிந்திய ஈராக்கின் அரசியல் களத்தில் ISIS யாரது முகம் என்பதை மிகக் கிட்டிய எதிர்காலம் நமக்கு உணர்த்தக் கூடும். அதுவரை களங்கள் ஊகங்களால் நிரம்பி வழிவதைத் தவிர்க்க முடியாது.
Disqus Comments