Saturday, January 3, 2015

2015ம் ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டி இன்று 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.
 அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர்.
நியூசிலாந்து அணியில்  பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத்போர்ட்- கேன் விலியம்சன்- ரொஸ் டெய்லர்- ஜேம்ஸ் நீஷம்- பி.ஜே. வெட்லின்- மாக் க்ரெயிக்- டிம் சௌத்தி, நீல் வெக்னர், டிரன்ட் போல்ட், குரே அண்டர்சன் மற்றும் டொக் பேஸ்வெல் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இதையடுத்து நியூசிலாந்து அணிக்கெதிராக 7 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி கிறைஸ்ட்சேர்சில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments