ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைதிரிபால ஸ்ரீசேனாவை ஆதரித்து நேற்று (02) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அக்கரைப்பற்றில் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் கலந்துகொண்டார்.
மேலும் கொளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் மற்றும் விஸேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.