Saturday, January 3, 2015

காத்தான்குடியில் இரு கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு கட்சி அலுவலகங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் பதாகைகள் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார அலுவலகமான அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் நேற்று நள்ளிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த கதிரைகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொங்க விடப்பட்டிருந்த பதாகைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த தேர்தல் அலுவலகம் மைத்தரிபால சிறிசேனவை ஆதரித்து காத்தான்குடி கடற்கரையில் நேற்றிரவு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த அலுவலகம் உடைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதே போன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகமொன்று தாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. பாலமுனை வீதியிலுள்ள இவ்வலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களும் உடைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் பதாகைகளும் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Disqus Comments