Sunday, January 4, 2015

பெரிய கரிசல் அபிவிருத்தி சங்கம் கத்தாரில் அங்குரார்ப்பணம்


கடந்த வெள்ளிக்கிழமை கத்தார் வாழ் பெரிய கரிசல் மக்களினால் 'பெரிய கரிசல் அபிவிருத்தி சங்கம் கத்தார் ' ( Periya Karisal Development Society Qatar  ) ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை உருவாக்குவதற்காக கத்தார் கொர்னிச் அல் பித்தா பூங்காவில் ஒரு ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  


இவ்வொன்றுகூடலின் போது அணைத்து கத்தார் வாழ் பெரிய கரிசல் மக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை மேலும் சிறப்பித்தனர். அது மட்டுமல்லாது இந்த சங்கத்தின் நோக்கம், எதிர்கால செயற்பாடுகள், கத்தார் வாழ் பெரிய கரிசல் மக்கள் மத்தியிலான ஒற்றுமை போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடபட்டன.

மேலும்  பெரிய கரிசலில் தொடர் தேர்ச்சியாக நிலவி வருகின்ற சில குறைகள் அடையாளம் கானப்பட்டு அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும்?. இதற்கு கத்தார் வாழ் பெரிய கரிசல் மக்களின் பங்கு எவ்வாறு அமையப் போகின்றது?    என்பது பற்றியும் மிக தெளிவாக பேசப்பட்டது. இப்புதிய முயற்சிக்கு ஊர் மக்களின் ஒத்துளைபினை இந்த பெரிய கரிசல் அபிவிருத்தி சங்க கத்தார் உருப்பினர்கள்  பெரிதும் வேண்டி நிட்பதாக கேட்டுகொண்டனர்.



Disqus Comments