Sunday, January 4, 2015

புத்தளம் மாவட்ட கட்சித் தாவல். UNPயிருந்து மஹிந்தவை நோக்கி கிங்ஸ்ஸி லால்.

-எம்.யூ.எம்.சனூன் 
ஐக்கிய தேசிய கட்சி இன்று துண்டு துண்டாக பிளவுப்பட்டுள்ளது. தனது கட்சியை காப்பாற்றி கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சியினால்  எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்? எனவே தான், இந்நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லக்கூடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்ததாக வடமேல் மாகாண சபையின் உறுப்பினரும் புத்தளம் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான கிங்க்ஸ்லி லால் பெர்னாண்டோ தெரிவித்தார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவு தெரிவிப்பது தொடர்பில், எடுத்த தீர்மானம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், 

ஐக்கிய தேசிய கட்சிக்காக நான் நீண்ட நாள் உழைத்துள்ளேன். கட்சி அமைப்பாளராக இருந்து எனது சொந்த நிதியில்  பிரதேசத்தின் கல்வி மற்றும் சமூக நலன் அபிவிருத்திகளுக்கு உழைத்துள்ளேன். சந்திரிகா, மைத்திரி பாலசிறிசேன மற்றும் பொன்சேகா  ஆகியோரின் கூட்டமைப்பில் நம்பிக்கை வலுவிழந்தே, நான் ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டேன் என அவர் தெரிவித்தார். 

நாட்டின் அபிவிருத்தியில் துரிதமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக, எதிர்காலத்தில் உழைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். -(TAMIL MIRROR)

Disqus Comments