Saturday, May 23, 2015

10 வருட சேவையை பூர்த்தி செய்திருந்தால் EPF லிருந்து 30% பெற்றுக்கொள்ள முடியும்

பத்து வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களின் சேமலாப கணக்கிலிருந்து அங்கத்தவர்களுக்கு 30 வீதத்தை பெற்றுக்கொடுக்க தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
ஊழியர் ஒருவர் பத்து வருடங்களுக்கு தொடர்ச்சியாக சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்திருந்து, அவரது கணக்கில் மூன்று இலட்சம் ரூபாவிற்கு அதிக தொகை இருப்பின், அதிலிருந்து 30 வீதம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தத் தொகை தொழில் திணைக்கள அலுவலகத்தினால் விநியோகிக்கப்படவுள்ளது.
Disqus Comments