Tuesday, May 26, 2015

அரச ஊழியர்களின் பகல் நேர உணவுக்கான இடைவேளை 30 நிமிடங்களாக குறைப்பு

அரச ஊழியர்களின் பகல் நேர உணவுக்கான இடைவேளை 1 மணித்தியாலத்திலிருந்து 30 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகேயினால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இவ்விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது அரசாங்கம் மற்றும் அரச ஊழியர்களின் கடமை என்ற அடிப்டையில் வினைத்திறனுடைய சேவையை வழங்கும் நோக்கிலே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் புதன்கிழமை பொதுமக்கள் தினம் என்ற அடிப்படையில் அந்நாளில் விடுமுறை எடுப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அச் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Disqus Comments