Wednesday, May 20, 2015

விரைவில் கிரெடிட் கார்டு அளவில் சிறிய கம்ப்யூட்டர்

அமெரிக்காவில் இயங்கும்  ஒரு பிரபல தொழில்நுட்ப நிறுவனம் கிரெடிட் கார்டு (Credit Card) அளவில்  கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்கி வருகிறது. வெறும் 1200 ரூபாய்க்கு (அமெரிக்க மதிப்பில் 9 டாலர்) கிடைக்கும் இந்த கம்ப்யூட்டர் விரைவில் சந்தைக்கு வருகிறது.


சிப் (CHIP) என்றழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர், 1 ஜிகாஹேர்ட்ஸ் (1 Ghz) பிராஸசரும், 512 எம்.பி. நினைவகமும் (512 MB RAM), 4 ஜி.பி. சேமிப்பும் கொண்டதாக இருக்கும். இதில் வை-பை மற்றும் ப்ளூடூத்தும் இடம்பெற்றிருக்கும். லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இந்த கணினி இயங்கும் என்றும் இதனை எந்த வகையான மொனிடருடனும் (VGA, HDMI) இணைத்துக்கொள்ள முடியும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.




மேலும் வரும் 2016 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கணினி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விலை மிக மலிவாக உள்ளதால் இது அடிப்படையான கணினியாக இருக்குமோ என்று தொழில்நுட்ப துறையில் உள்ள பலராலும் விமர்சிக்கப்படுகிறது. ஆயினும் இதை தயாரிக்கும் நிறுவனம் இதை மறுத்துள்ளது, இந்த கணினியும் சாதாரண கணினி போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Disqus Comments