Monday, June 1, 2015

பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜப்பானை பின் தள்ளியது முதலிடம் பெற்றது. - ஜேர்மனி

உலகிலேயே பிறப்பு வீதம் மிகவும் குறைந்த நாடாக ஜேர்மனி மாறியதால், அந்நாட்டுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை பல ஆசிய ஆபிரிக்க நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில் , பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவது வளர்ச்சியடைந்த நாடுகளை பாதிப்பதாக உள்ளது.
பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்து வரும் ஜப்பானைப் பின்தள்ளிவிட்டு உலகிலேயே குறைந்த அளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி தற்போது மாறி இருக்கிறது.
அங்கே ஆயிரம் பேருக்கு 8.2 குழந்தைகள் என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு வீதம் இருந்துள்ளது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனஅற அளவில் இருக்கிறது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்துவருகிறது. போர்த்துக்கல்லில் பிறப்பு வீதம் 9 ஆக இருக்கிறது. இத்தாலியில் இது 9.3 ஆக இருக்கிறது. பி ரா ன்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிறப்பு வீதம் 13 என்ற அளவில் உள்ளது.
ஜெர்மனியில் பிறப்பு வீதம் குறைவதால் , உழைக்கும் வயதில் இருப்போர் அதாவது 20 முதல் 65 வயதுக்குட்பட்டோரின் தொகை மொத்த மக்கள் தொகையில் தற்போது 61 சதவீதமாக உள்ளது , வரும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் இது 54 சதவீதமாக குறைந்துவிடும் என்று ஹாம்பர் இன்ஸ்டிடுயூட் ஆப் இன்டர்னேஷனல் எக்கனாமிக்ஸ் எச்சரித்துள்ளது.
பிறப்பு வீதம் குறைவதால், நாட்டில் வயதானவர்களின் வீதம் அதிகரித்துவி டும் என்று அஞ்சப்படுகின்றது.
தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க திறன்படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்றும் அதிக அளவு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டுமென்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஜெர்மனிய அரச தலைவி அஞ்சலா மெர்கலின் அரசு , குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு அதிக அளவு ஆதரவுகளை அளித்து வந்தாலூம் அங்கே மக்கள் தொகை குறைந்து கொண்டு வருகிறது. அதே நேரம் ஆபிரிக்காவின் நைஜரில் ஆயிரம் பேருக்கு 50 குழந்தைகள் புதிதாக பிறக்கின்றன.
Disqus Comments