Sunday, June 21, 2015

SAMSUNG நிறுவனம் பாவணையாளா்களின் தகவல்களை திருடி பிழைப்பு நடாத்துகின்றதா?

(நன்றி தொழில்நுட்பம்.இன்இன்றயைய மீடியா யுகத்திலே எள்ளளவு உள்ள பிரச்சினையையும் எருமை அளவுக்கு தெரியதாக்கி விடுவதில் மிக முக்கியம் இடம் வகிப்பது சமூக வளைத்தளம் பாவிக்கும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பட்டதாரிகள். இவா்களது தொல்லையினால் இன்று பல தரப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. எந்த தகவலை கொண்டு சோ்க்க வேண்டுமோ அது போன்ற முக்கியமாக தகவலை கொண்டு சோ்க்காமல் ஏதாவது ஒன்றைப் போட வேண்டும், பகிர வேண்டும் என்ற நோக்கில் கண்டதை மற்றும் கேட்டதை உண்மை நிலையறியாது பரப்பி அவா்களும் கெட்டு மற்றவா்களை குழப்பி, தடுமாற வைக்கின்றனா்.

சரி விடயத்துக்கு வருவோம். கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் ஒரு முக்கியமான விடயம் தான் Smart Phone கள் மூலம் சம்சுங் நிறுவனம் பாவனையாளா்களின் தரவுகளை திருடுகின்றது. நாம் போன்களில் சேமித்து வைத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் அந்தரங்கங்கள் போன்றவற்றை திருடி பிழைப்பு நடாத்துகின்றது. அதற்காக அவா்கள் போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் மேலுறைக்குள் ஒரு வகையான Chipஐ வைத்துள்ளார்கள். அதனை நாம் எமது பேட்டரிகளில் இருந்து நீக்கி விட்டால் எமது போன் பாது காப்பாக மாறிவிடும் என்று ஆளுக்கு ஆள் பரப்பிக் கொள்ளு வருகின்றனா். தமிழ், சிங்களம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மேற்படி கூறப்பட்ட பேட்டரியை காட்டி அதன் உறைக்கு இருக்கும் இருக்கும் chip வெளியில் எடுத்துக் காட்டி பார்த்தீா்களா இது தான் உங்களுக்கு எதிரி என்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சம்சுங் நிறுவனம் எமது சந்திகளில் உள்ள MOBILE PHONE REPAIRING கடை என்று நினைத்துக் கொண்டதுதான் மேற்படி விளக்கம் காரணம்.

அப்படி என்றால் அந்த chip என்ன என்று நீங்கள் கேட்பது விளங்குகின்றது. அங்கு இருக்கும் Chip யின் பெயா் தான் NFC Antenna.

அதாவது NFC என்றால் ஒரு வகையான தொழில் நுட்பம் ஆகும். Near Field Communication என்பதான் சுறுக்கம் தான் NFC என்பதாகும். NFC - Near Field Communications என்பது குறுகிய தூர அல்லது அண்மைத் தகவல் தொடர்பு எனச் சொல்லப்படும்.. ஓரளவிற்கு Bluetooth, WIFI போன்றதும், தற்போது உள்ள கைத்தொலைபேசிகளில் தொடர்புகள் இல்லாது (contactless Wi-Fi-lite ), செயல்படும் WIFI lite போல் தரவுகளை பரிமாறும் முறையாகும். தற்போது Android, iPhone உட்பட பல கைத்தொலைபேசிகளில் இந்த முறை இணைக்கப்பட்டுள்ளது.

NFC Enables 1st Samsung Phone
இன்று சந்தையில் உள்ள அனைத்து போன்களிலும் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பாக Samsung போன்களில் பயன்களில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது SAMSUNG SGH-D500 MOBILE PHONE தான்.

அதற்கு பின்னா் வந்த அனைத்து போன்களிலும் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது.

குறிப்பாக SAMSUNG நிறுவனம் தனது இணைய தளத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளது. பட்டரியை பாவிக்கும் நீங்கள் அவதானமாக பாவியுங்கள்.பட்டரியின் உள்ளே NFC Antennaக்கள் இருக்கின்றன என்பதை குறிப்பிட்டுள்ளன. 


மேலும் நம் வைத்திருக்கும் ஒவ்வொரு SAMSUNG போன்களில் பேட்டரியிலும் NFC யின் விரிவான Near Field Communication என்ற வாசகம் SAMSUNG என்ற பெயருக்கு அடுத்த படியாக பொறிக்கப்பட்டே வருகின்றது. படத்தைப் பார்க்க.

 அது மட்டுமல்லாது அண்மையில் வெளிவந்த சில போன்களில் NFC Antennaக்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை Samsung நிறுவனம் பின்வரும் படங்கள் மூலம் தெளிவு படுத்தியுள்ளது.



NFC என்றால் என்ன அது எவ்வாறு செயற்படுகின்றது? அதன் பயன்படுகள் என்ன? அதை எப்படி நாம் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் அடங்கிய ஆங்கில மொழி மூலமான காணொளியை இங்கு காணலாம்.

Disqus Comments