Monday, August 10, 2015

கல்வி அறிவு மட்டத்தினை 100 வீதமாக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

எதிர்கால கல்வி திட்டத்தில் நாட்டில் உள்ள அனைவரினதும் கல்வி அறிவு மட்டத்தினை100 வீதமாக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்வி துறை வல்லுனர்களால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அனைத்து விதமான ஒத்துழைப்புகளை பயன்படுத்தி நாட்டின் சிறார்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு அனைவரும் அரப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வி துறையில் காணப்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு அனைத்து சிறார்களுக்கும் சிறந்த கல்வியை பெற்றுப் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன்
செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

பொலன்னறுவை வலயக் கல்வி காரியாலயத்தில் புதிததாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒன்றின் திறப்பு விழாவின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை வகுக்கும் போது வடக்கு கிழக்கு தெற்கு என வகைப்படுத்தாது ஒரே மாதிரியான திட்டங்களை நாட்டிற்கு தேவையான அபிவிருத்திகளை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
Disqus Comments