Friday, August 14, 2015

மஹிந்தவுக்கு மைத்திரி அனுப்பிய கடிதத்தின் தமிழ் வடிவம் இதோ!

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­கான குறைந்­த­பட்ச தேவை­யான 113 ஆச­னங்­களை பெற்­றாலும் உங்­களை பிர­த­ம­ராக நிய­மிக்­க­மாட்டேன். மாறாக சுதந்­திரக் கட்­சியில் உள்ள சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வ­ரையே பிர­த­ம­ராக நிய­மிப்பேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தேர்­தலில் அர­சாங்கம் அமைப்­ப­தற்­கான குறைந்­த­பட்ச ஆச­னங்­க­ளான 113 ஆச­னங்­களை ஐக்­கிய மக் கள் சுதந்­திர முன்­னணி பெறா­விடின் அர­சாங்­கத்தை அமைப்ப­தற்­கான எஞ்­சிய ஆச­னங்­களை பெறு­வ­தற்­கான தலை­யீட்டை நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் நான் மேற்­கொள்வேன் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கு சுதந்­திரக் கட்­சியில் உள்ள சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா ஜோன் சென­வி­ரத்ன சமல் ராஜ­பக்ஷ அதா­வுத சென­வி­ரத்ன ஏ.எச்.எம்.பௌஸி சுசில் பிரேம்­ஜ­யந்த அநு­ர­பி­ரி­ய­தர்­சன யாப்பா போன்­ற­வர்­களில் ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷ ஆசிர்­வாதம் வழங்­க­வேண்டும் என்றும் ஜனா­தி­பதி குறித்த கடி­தத்தில் கோரிக்கை விடுத்­துள்ளார்.
அந்தக் கடி­தத்தில் தொடர்ந்தும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது
இரண்டு தசாப்­தங்­க­ளாக நான்கு ஜனா­தி­பதித் தேர்­தல்கள் மற்றும் நான்கு பாரா­ளு­மன்ற தேர்­தல்­களை வெற்­றி­கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான கூட்­டணி கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் உங்கள் தலை­மையில் தோல்­வி­ய­டைந்­தது. தேர்­தலின் பின்னர் 7 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கடி­தத்தை உங்­க­ளுக்கு எழு­து­கின்றேன்.
நான் வந்த முறை
உங்­க­ளைப்­போன்றே நானும் அர­சி­யலில் சுதந்­தி­ரக்­கட்­சி­யினின் ஊடாக கால்­ப­தித்தேன். நீங்கள் இரண்டு முறை இந்த நாட்டில் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தீர்கள். சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடா­கவே இதனை உங்­களால் அடை­ய­மு­டிந்­தது. ஆனால் நான் எதிர்க்­கட்­சி­களின் பொது­வேட்­பா­ள­ராக அறி­மு­க­மா­கியே ஜனா­தி­ப­தி­யாக பத­வி­பெற்­றுள்ளேன். உங்­க­ளுக்கு எதி­ராக நாட­ளா­விய ரீதியில் காணப்­பட்ட மக்­களின் கருத்தை ஒன்­றி­ணைத்து ஜனா­தி­பதி பத­வியை மீண்டும் கட்­சிக்­குள்­ளேயே வைத்­துக்­கொண்­டுள்ளோம்.
எனினும் எனக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டை­யி­லான பிணைப்பு மிகவும் பல­மா­னது. தேர்தல் தோல்வி என்­பது இனி­மை­யான அனு­ப­வ­மாக இருக்­காது. எனினும் கடந்த ஜனா­தி­பதி தேர்தல் தோல்­வியின் பின்னர் சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் 1977 மற்றும் 2001 ஆம் ஆண்­டு­களில் ஏற்­பட்ட தோல்­வி­களைப் போன்ற முற்கள் நிறைந்த அனு­ப­வத்தை பொற­வில்லை.
பாது­காத்தேன்
காரணம் சுதந்­தி­ரக்­கட்­சியில் 48 வரு­டங்கள் அங்கம் வகித்து 13 வரு­டங்கள் பொதுச் செய­லா­ள­ராக இருந்த நான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­மையே இதற்கு கார­ண­மாகும். ஒரு­வேளை மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்றி வேறு­யா­ரா­வது பொது­வேட்­பா­ள­ராக வெற்றி பெற்­றி­ருந்தால் என்ன நடந்­தி­ருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். எனது வெற்­றியின் பின்னர் நான் சுதந்­தி­ரக்­கட்­சியின் எம்.பி.க்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ர­வா­ளர்கள் அனை­வ­ரையும் பாது­காத்தேன்.
உங்­க­ளுடன் இருந்தேன்
நான் ஜன­வரி 8 ஆம் திகதி வெற்­றி­பெற்­ற­வுடன் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருந்தால். சுதந்­தி­ரக்­கட்­சியின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் என்ன நடந்­தி­ருக்­கு­மென எண்­ணிப்­பார்க்க முடி­யாது. 2005 ஆம் ஆண்டு நீங்கள் ஜனா­தி­ப­தி­யாகும் வரை கடந்­து­வந்த தீர்க்­க­மான பய­ணங்­களில் நான் உங்­க­ளுக்­காக முன்­னின்றேன் என்­பதை மறக்­க­மு­டி­யுமா?
2004 ஆம் ஆண்டு தேர்­தலின் பின்னர் நான் உங்­களை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தற்கு நான் எடுத்த முயற்­சிகள் எவ்­வா­றா­ன­தென்­பதை நீங்கள் மறந்­தி­ருக்க மாட்­டீர்கள். அன்று உங்­களை பிர­த­ம­ராக்க விடாமல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் விமல் வீர­வன்ச முன்­னெ­டுத்த செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நான் உங்­க­ளுக்­காக முன்­னின்றேன்.

2005 ஆண்டு நிலை
2005 ஆம் ஆண்டு உங்­களை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்கும் செயற்­பாட்டில் ஏற்­பட்ட நெருக்­க­டி­யின்­போது உங்­க­ளுக்­காக முன்­னின்றேன். எனினும் இன்று உங்­க­ளி­ட­மி­ருக்­கின்ற பலர் 2005 ஆம் ஆண்டு நீங்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­றி­ருந்தால் ஐ.தே.க.வுடன் இணை­வ­தற்கு தயா­ரா­க­வி­ருந்­தனர்.
பஷிலின் செயற்­பா­டுகள்
சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளான எனக்கும் உங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நீண்ட கால அர­சியல் உறவு பாதிப்­ப­டைந்­த­மைக்கு பஷில் ராஜ­ப­க்ஷவின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அமைந்­தன என்­பது உங்­க­ளுக்கு தெரிந்­த­வி­ட­ய­மாகும். மைத்­தி­ரி­பா­ல­வுக்கு எதி­ரான கொள்­கை­யொன்றை பஷில் பின்­பற்றி என்னை தோல்­வி­ய­டைந்த அர­சி­யல்­வா­தி­யாக காட்­டு­வ­தற்கு எடுத்த முயற்­சிகள் இறு­தியில் உங்கள் குடும்­பமே தோல்­வி­ய­டை­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தன.
நீங்கள் உத­வ­வில்லை
பஷில் ராஜ­பக்ஷ எனது அர­சி­ய­லுக்கு தொடர்ச்­சி­யாக தடை­களை ஏற்­ப­டுத்தி வந்த நிலையில் அந்த விட­யத்தில் தலை­யிட்டு எனது சுயா­தீ­னத்தைப் பாது­காப்­ப­தற்கு உங்­களால் முடியும் என நான் எதிர்­பார்த்தேன்.எனினும் நான் எதிர்­பார்த்த நேர்­மைத்­தன்­மையை நீங்கள் 2014 நவம்பர் 21 ஆம் திக­தி­வரை வெளிக்­காட்­ட­வில்லை.
மூன்று தடவை சந்­தித்தோம்
கடந்த ஏழு மாதங்­களில் நான் உங்­களை மூன்று தட­வைகள் சந்­தித்தேன். நீங்கள் குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்பு மனுவில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு 2 தினங்­க­ளுக்கு முன்னர் என்­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­னீர்கள். அனைத்து சந்­திப்­புக்­க­ளின்­போதும் இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்டாம் என்றும் தேர்­தலில் கட்­சியை வழி­ந­டத்த நான் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் கூறினேன்.
எதிர்­பார்ப்­பற்றுப் போனேன்
எனினும் நீங்கள் வேட்­பு­ம­னுவில் கைச்­சாத்­திட்­டதும். சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ரான எனது வகி­பாகம் எதிர்­பார்ப்­பற்ற நிலைக்­கு­போ­னது. நீங்கள் இம்­முறை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டாமல் விட்­டி­ருந்தால் கடந்த தேர்­தலில் என்­னுடன் செயற்­பட்ட தமிழ் முஸ்லிம் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு சுதந்­தி­ரக்­கட்­சியை பாரிய நம்­பிக்கை பாதையில் கொண்டு சென்­றி­ருப்பேன்.
உங்­க­ளுக்கு புதியபதவி தர முன்­வந்தேன்

தேர்­தலில் நீங்கள் போட்­டி­யி­டக்­கூ­டாது என நான் கூறி­யி­ருந்­தாலும் அர­சி­யலில் இருந்து உங்­களை முழு­மை­யாக அகற்றும் எண்ணம் எனக்­கி­ருக்­க­வில்லை. உங்­க­ளுக்­காக பொருத்­த­மான தகு­தி­யான அர­சியல் அமைப்பு ரீதி­யான ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வ­தற்கு நான் முன்­வந்­தி­ருந்தேன்.
நிரா­க­ரித்­தீர்கள்
உங்கள் குடும்­பத்தில் பலர் அதனை விரும்­பி­ய­தா­கவும் அறிந்தேன். எனினும் நீங்கள் அதனை நிரா­க­ரித்­த­துடன் சுதந்­தி­ரக்­கட்சி பற்றி சிந்­திக்­காமல் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஊடாக மட்டும். செயற்­பட்டு வந்­தீர்கள். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் உள்ள சிறிய குழு­வினர் உங்­க­ளி­ட­முள்ள வாக்கு பலத்தை பயன்­ப­டுத்தி அவர்கள் பாரா­ளு­மன்றம் செல்ல முயற்­சிக்­கின்­றனர்.
சிறிய குழுவின்

குகைக்குள் சிக்­கிய சு.க.
64 வருட வர­லாற்­றைக்­கொண்ட 35 வரு­டங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த சுதந்­திரக் கட்சி ஒரு சிறிய குழு­வி­னரின் குகைக்குள் சிக்­கி­யது. அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்­க­வேண்டும்.விருப்­பு­வாக்கு பல­மற்ற அர­சியல் எதிர்­காலம் இல்­லாத ஒரு சிறிய குழு­வி­னரின் கைக­ளுக்கு கட்­சியை ஒப்­ப­டைப்­ப­தற்கு நீங்கள் எடுத்த முயற்­சியை முடி­வுக்குக் கொண்­ட­வர வேண்­டி­யுள்­ளது.
1956 ஆம் ஆண்டு சுதந்­தி­ரக்­கட்சி இன­ரீ­தி­யான மத ரீதி­யான ஆழம் நிறைந்த கட்­சி­யென்ற ஒரு கருத்து நில­வி­ய­போதும் அதன் பின்னர் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­கவும் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் கட்­சிக்கு தலை­மைத்­து­வத்தை வழங்­கி­ய­போது எமது கட்­சி­யா­னது பல்­லின பல்­மத பிர­தி­நி­தித்­து­வத்தைக் கொண்ட கட்­சி­யென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது.

இன­வாத பாதை
எனினும் நீங்கள் சுதந்­தி­ரக்­கட்­சிக்கு தலைமை வழங்­கிய கடந்த 9 வரு­டங்­களில் இலங்­கையின் சமூக யதார்த்­த­மான பண்­மு­கத்­தன்­மையை நிரா­க­ரித்த கட்­சி­யாக சுதந்­தி­ரக்­கட்சி உரு­வா­கி­யுள்­ளது. ஜன­வரி 8 ஆம் திகதி நீங்கள் அடைந்த தோல்­விக்கு உங்­க­ளா­லேயே உரு­வாக்­கப்­பட்ட இன­வாதம் உங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டமை உங்­க­ளுக்கு தெரி­யாதா?

காரணம் சுதந்­தி­ரக்­கட்சி சிங்­கள பௌத்த மக்­களை மட்டும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­யாக மாறி­யது. இவ்­வா­றான ஒரு அடிப்­ப­டை­வாத நிலைமை சுதந்­தி­ரக்­கட்­சி­போன்ற ஒரு சிரேஷ்ட கட்­சிக்கு ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது. அதி­லி­ருந்து மீள்­வ­தற்கும் சுதந்­தி­ரக்­கட்­சியை நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரித்­தான கட்­சி­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­கு­மான சவால் என்­னிடம் உள்­ளது.

இட­ம­ளிக்க முடி­யாது.
எனினும் உங்­களை சுற்றி இருப்­ப­வர்கள் இன­வா­தத்தை உரு­வாக்கி விருப்பு வாக்­கினைப் பெற முயற்­சிக்கும் ஒரு­கு­ழு­வினர் அல்­லவா? இவர்கள் உண்­மையில் சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் அல்ல . அவர்­க­ளுக்குத் தேவை­யா­ன­வாறு கட்­சியை இயக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக இருக்­கும்­போது இந்த நாட்டில் பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை என இனங்கள் இல்லை என அடிக்­கடி கூறி­யி­ருந்­தீர்கள்.
நான் வழி­ந­டத்­தி­யி­ருந்தால்…
எனினும் கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் முதல் ஆகஸ்ட் 12 ஆம் திக­தி­வரை நீங்­களும் உங்­களை சுற்­றி­யுள்­ள­வர்­களும் இன­வா­தத்­தையே பரப்­பி­னீர்கள். நான் வணங்கும் பௌத்த தர்மம் உள்­ளிட்ட அனைத்து மதங்­களும் இன­வாத்தை எதிர்க்­கின்­றன. அதனை அனு­ம­திக்­க­வில்ல. மேலும் இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் பிர­ஜைகள் என்னில் பாரிய நம்­பிக்­கையை வைத்­துள்­ளனர். ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் சுதந்­தி­ரக்­கட்­சியை நான் வழி­ந­டத்­தி­யி­ருந்தால் வர­லாற்றில் எப்­போ­து­மில்­லா­த­வாறு நம்­பிக்­கையை எமது கட்சி பெற்­றி­ருக்கும்.
எனது சவால்
21 ஆம் நூற்­றாண்டின் சவால்­களை வெல்­வ­தற்­காக இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளத்­தையும் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் இன­வா­தத்தை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிப்­பது கட்­சிக்கும் நாட்­டுக்கும் செய்யும் துரோ­க­மாகும். வேட்பு மனு வழங்கும் செயற்­பாட்டில் கட்­சியின் தலை­வ­ரா­கவும் எனக்கு ஒரு சவால் காணப்­பட்­டது. அதா­வது இந்த மிகப்­பெ­ரிய சுதந்­தி­ரக்­கட்­சியை உடைத்­து­வி­டக்­கூ­டாது என நான் சிந்­தித்தேன்.

இரண்டு கட்சி கலா­சா­ர­மு­டைய எமது நாட்டில் ஒரு கட்சி பல­வீ­ன­ம­டைந்து வீட்டால் அதனால் ஏற்­படும் நிலைமை என்­ன­வென்று எனக்கு தெரியும். எனவே எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் சுதந்­தி­ரக்­கட்­சியை இரண்­டாக உடை­வ­தற்கு இட­ம­ளிக்­க­மு­டி­யாது.

எனது பின்­ன­டைவு
எனினும் நீங்கள் சுதந்­தி­ரக்­கட்­சியை உடைத்­துக்­கொண்டு தனித்து வேட்பு மனு­தாக்கல் செய்ய தயா­ரா­கி­ய­மையால் கட்­சியின் எதிர்­கா­லத்தை நினைத்து நான் எனது பக்­கத்தில் பின்­ன­டை­வுக்குச் சென்றேன். கம்­பஹா மாவட்­டத்தில் ரண­துங்க குடும்­பத்தில் மூவ­ருக்கு சுதந்­திரக் கட்­சியில் வேட்பு மனு­கொ­டுப்­பது யதார்த்­த­மல்ல என்ற நிலையில் மேல்­மா­காண முத­ல­மைச்சர் தனது வேட்பு மனுவை நீக்­கிக்­கொள்வார் என எதிர்­பார்த்தேன். எனினும் முத­ல­மைச்­ச­ருக்கு வேட்­பு­மனு கிடைக்­கா­விடின் நீங்கள் கட்­சியை விட்டு வெளி­யே­று­வ­தாக கூறி­யி­ருந்­தீர்கள். அதனால் ரண­துங்க குடும்­பத்தில் ஒருவர் கட்­சியை விட்டு விலகி ஐ.தே.க.வுடன் இணைந்­த­போது உங்­க­ளுக்கு வெற்­றியைக் கொடுத்­து­விட்டு நான் மௌன­மாக இருந்தேன்.
உபாய ரீதி­யான எனது பின்­ன­டைவு
ஒரு­வ­ருக்கு வழங்­கப்­படும் வேட்பு மனு விவ­கா­ரத்­தினால் கட்சி பிள­வு­ப­டாமல் தடுப்­ப­தற்­காக உபாய ரீதி­யாக நான் பின்­ன­டை­வுக்குச் சென்­றமை ஒற்­று­மைக்கு வலு­வாக அமைந்­தது. தேசிய அர­சாங்க யோசனை என்­பது எனது தனிப்­பட்ட யோசனை அல்ல. அதற்கு சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுவும் பாரா­ளு­மன்ற குழுவும் முழு அனு­ம­தியை வழங்­கி­யது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே தேசிய அர­சாங்கம் அமைந்­தது. சுதந்­தி­ரக்­கட்­சி­யி­ன­ருக்கு அமைச்சுப் பத­வி­களும் கிடைத்­தன. எனினும் அவ்­வாறு அமைச்சுப் பத­வி­களை பெற்­ற­வர்­களை உங்கள் ஆத­ர­வா­ளர்கள் கடு­மை­யாக விமர்­சித்­தனர்.இது விருப்­பு­வாக்கு சண்­டை­யாகும். இது தொடர்பில் நான் அறிந்த உண்மைக் கதையை கூற­வேண்டும்.
உங்­களின் இரத்­தத்தை உறிஞ்­சி­வ­தற்கு முயற்சி
உங்­க­ளுக்குள் எஞ்­சி­யி­ருக்கும் இறுதி அர­சியல் இர­தத்­து­ளி­யையும் உறுஞ்சி அருந்­து­வ­தற்கு உங்­களை சுற்­றி­யுள்­ள­வர்கள் முயற்­சிக்­கின்­றனர். உங்­களின் பண்­பு­களைப் பாடிக்­கொண்­டி­ருக்கும் இந்த குழு­வினர் எனக்கு இர­க­சிய தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்­தியும் தூது அனுப்­பியும் பொதுத் தேர்­தலின் பின்னர் என்­னுடன் அர­சியல் செய்­வ­தற்கு தயா­ரா­க­வுள்­ள­தாக கூறி­வ­ரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதா­வது ஒரு அமைச்சுப் பத­வியை தரும்­ப­டி­கோ­ருக்­கின்­றனர். இவ்­வாறு சந்­தர்ப்­ப­வா­தி­யாக செயற்­படும் இவர்கள் உங்­க­ளுக்கு ஆத­ர­வு­போன்று உங்­க­ளுடன் நிற்­கின்­றனர்.
எனது புகைப்­படம்
கட்­சிக்குள் பிரிவு இருப்­ப­தாக காட்டும் அவர்கள் பொதுத் தேர்­த­லுக்­காக என்­னு­டைய புகைப்­ப­டத்தை பிர­சா­ரத்­துக்­காக பயன்­ப­டுத்தும் விதத்தை நான் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன். உங்­க­ளையும் உங்­க­ளது பெய­ரையும் உங்­க­ளது புக­ழையும் கொள்­ளை­ய­டிக்கும் இந்த விருப்பு வாக்கு கொள்­ளை­யர்கள் தொடர்ந்தும் இருந்தால் ஐ.ம.சு.மு.வின் தோல்வி நிச்­ச­ய­மா­கி­விடும்.
நீங்கள் என்­னுடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட எதிர்­பார்ப்­ப­தாக தெரி­விக்கும் செய்­தி­யொன்றை அண்­மையில் ஊட­கத்தில் பார்த்தேன். உங்­க­ளுக்கு அவ்­வா­றான ஒரு எதிர்­பார்ப்பு இருந்தால் நான் உங்­க­ளுக்கு ஒரு­வி­ட­யத்தை கட்­டாயம் கூறியே ஆக­வேண்டும். உங்­க­ளினால் தான்­தோன்­றித்­த­ன­மாக நிறை­வேற்­றப்­பட்ட 18 ஆவது அர­சியல் அமைப்பு திருத்தம் கார­ண­மாக நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் ஜனா­நா­யக சுதந்­திரம் குழி­தோண்டி புதைக்­கப்­பட்­டது.

பறித்­தீர்கள்
அது மட்­டு­மன்றி சுதந்­தி­ரக்­கட்­சியின் உயிரும் உயி­ரான சமூக ஜன­நா­யக முகமும் கட்­டு­டைந்­து­போ­னது. நிரந்­த­ர­மாக ஜனா­தி­பதிப் பத­வியில் நீடிப்­ப­தற்­காக நீங்கள் மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் அபி­மா­னத்­தையும் கட்­சி­யி­னதும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களின் எதிர்­கா­லத்தை பறித்­தி­ருந்­திர்கள். உங்­க­ளுக்கு முன் இருந்த ஜனா­தி­ப­திகள் செய்­த­தை­போன்று நீங்­களும் இரண்டு தடவை பத­விக்­குப்­பின்னர் ஓய்வு பெற்­றி­ருந்தால் எமது கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களில் ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­கவும் மற்­றொ­ருவர் பிர­த­ம­ரா­கவும் பதவி பெற சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்கும்.
தட்டிப் பறிக்­க­வேண்டாம்
எனினும் தற்­போதும் பொதுத்­தேர்­தலின் பின்னர் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு கிடைக்கும் சந்­தர்ப்­பத்தை தட்­டிப்­ப­றிப்­ப­தற்கு நீங்கள் முயற்­சிப்­பது தெ ளிவா­கி­றது. அவர்­க­ளுக்கு தற்­போ­தா­வது உரிய இடம் கிடைக்­க­வேண்­டாமா?எதிர்­வரும் தேர்­தலில் அர­சாங்கம் அமைப்­ப­தற்­கான குறைந்த பட்ச தேவை­யான 113 ஆச­னங்­களை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பெற்றால் இது­வரை பிர­தமர் பத­வியை பெற­மு­டி­யாத சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வரே பிர­த­ம­ரா­க­வேண்டும் என நான் நம்புகிறேன்.
தலையிடுவேன்
ஒருவேளை 113 ஆசனங்களைப் பெறமுடியாமல் அதற்கு அண்மித்த ஒரு எண்ணிக்கையை ஐ.ம.சு.மு.பெற்றால் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான எஞ்சிய ஆசனங்களைப் பெறுவதற்கான தலையீட்டை நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் நான் மேற்கொள்வேன். அப்போதும் கூட பிரதமராக உங்களை பிரதமராக நியமிக்கமாட்டேன். கட்சியின் சிரேஷ்ட ஒருவரே பிரதமராக பதவிபெறவேண்டும். பிரதமர் பதவியைப் பெறுவதற்கான அனுபவமுள்ள அரசியல் தூரநோக்கு கொண்ட பல தலைவர்களைக் கொண்ட ஒரே கட்சி சுதந்திரக்கட்சியாகும்.
பலர் உள்ளனர்

விசேடமாக நிமல் சிறிபால டி சில்வா ஜோன் செனவிரத்ன சமல் ராஜபக்ஷ அதாவுத செனவிரத்ன ஏ.எச்.எம்.பௌஸி சுசில் பிரேம்ஜயந்த அநுரபிரியதர்சன யாப்பா போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு உங்கள் ஆதரவையும் நெகிழ்வுத்தன்மையையும் தியாகத்தன்மையைும் ஆசிர்வாதத்தையும் வெ ளிக்காட்ட வேண்டும் என நாட்டினதும் மக்களினதும் சார்பாக கோரி நிற்கின்றேன்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தோல்வியுற்றத்தில் இருந்து இன்றுவரை நீங்கள் விகாரைகளுக்கு சென்றதும் அதற்கு ஊடக விளம்பரத்தைப்பெற்றதும் ஆச்சரியமானதாகும். காரணம் 2010 ஜனவரி 26 ஆம் திகதியிலிருந்து 2014 நவம்பர் 21 ஆம் திகதிவரை நீங்கள் எவ்வாறு செயற்பட்டிர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் கட்சி மட்டத்தில் நடத்தும் கலந்துரையாடல்களில் வைராக்கியம் குரோதம் போன்றவற்றையே நீங்கள் வெ ளிப்படுத்துவீர்கள் என கூறப்படுவது உண்டு.எனவே எதிர்வரும் தேர்தல் தினம் வரை இதயத்தினாலன்று புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுமாறும் இனவாதத்தை பரப்பும் கூற்றை வெளியிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

-நன்றி : கேசரி 14.8.2015
Disqus Comments