ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உறுதிசெய்துள்ளது.
கடிதத்தின் விபரங்கள் வருமாறு:
எதிர்வரும் பொது தேர்தலில் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான குறைந்த ஆசனமாக 113 பெற வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு ஆசனங்கள் பெற்று கொள்ளப்படும் பட்சத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக, நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, சமல் ராஜபக்ச, அதாவுட செனவிரட்ண, சுசில் பிரேமஜயந்த். அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியோரின் பெயர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.