(Issadeen Rilwan) இது ரம்புட்டான் காலம் மாதிரி இருக்கு,
அப்படித்தான் இதுவும் ஒரு வியாபாரம் தானே.........!
ஊர் ஊராக போய் கூவி விற்கப்படும் வியாபரமாக பரிணமித்திருக்கிறது இந்த தேர்தல்பிரச்சாரங்கள்.
மேடைகள் அமைத்து, சத்தத்தை உயர்த்தி சாதனைகளை சொல்லவேண்டியதலைவர்கள் (தன் குற்றம் மறைக்க, மறைத்து) அவன் சொத்து எண்ணிக்கையையும் இவன் மனைவிகளின் எண்ணிக்கையையும் சொல்லி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை உண்டுபண்ணும் காலமாக மாறி இருக்கிறது இந்த தேர்தல் காலம்.
குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும்ஆதரவாளர்கள் பொது மேடைகளில் மிக மோசமாக நடந்துகொள்வது கண்டுவெட்கப்படுகிறேன்.
ஒரு சமூக எழுத்தாளராக, சிந்தனையாளராக இருந்து வெட்கி நிற்கின்றேன் நம் சமூக நிலை கருதி.
முஸ்லிம்கள் நாங்கள், எங்களுக்கிடையில் சண்டையிட்டு மோதல்களை உண்டுபண்ணுவதால் பிற இனச்சகோதர்களுக்கும் எமக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு பதில் யார் தருவா.......?
நாம் இஸ்லாத்தை பின்பற்றுகிறேம் என்று வாய் வீச்சுக்கள் மட்டும் போதுமானதா.........?
சிந்தித்து செயற்படுவோம்.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.