Tuesday, September 1, 2015

ஒசாமா பின்லேடன் உயிருடன் உள்ளார் - எட்ர்வர்டு ஸ்னோடன் பரபரப்பு தகவல்


அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன். ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-


அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சிஐஏ ஊழியர்கள் பட்டியலில் உள்ளார். அவருக்கு மாதாமாதம் ரூ. 6 லட்சத்து 63 ஆயிரம் அளித்து வருகிறது அமெரிக்கா.

ஒசாமா தற்போது எங்கு வசிக்கிறார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் 2013ம் ஆண்டு அவர் ஒரு வில்லாவில் தனது 5 மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்தார். 

பாகிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்டது போன்று பொய்யான நாடகத்தை அமெரிக்கா நடத்தியது. ஒசாமா மற்றும் அவரது குடும்பத்தாரை பஹாமாஸில் யாருக்கும் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நாடகத்திற்கு பாகிஸ்தான் உளவுப்படையும் துணை போனது. 

தாடியும், ராணுவ ஜாக்கெட்டும் இல்லாமல் ஒசாமாவை யாராலும் அடையாளம் காண முடியாது. ஒசாமா உயிருடன் தான் உள்ளார் என்பதை நான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அந்த புத்தகம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்று அவர் கூறினார்.
Disqus Comments