Friday, June 6, 2014

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு 588 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு 588 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதன்மூலம் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளிலும், கடந்த ஆறு வருடங்களாக வலயக் கல்வி அலுவலகங்களிலும் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக இணைத்துக்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
Disqus Comments