(MS. முஸப்பிா்)
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேப்பமடு மற்றும் மணல்தீவு ஆகிய கிராமங்களில், நீண்ட காலமாக இல்லாமலிருந்த பாலர் பாடசாலை கட்டிடம் புத்தளம் நகர சபைத் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த இரு கிராமங்களிலும் இதற்காக 13 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட இவ்விரண்டு பாலர் பாடசாலை கட்டிடங்களும் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராச்சி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டொனில் போபஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.