(MS.முஸப்பிா்)
பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட எட்டுப் பேரைக் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டளுள் அடங்கும் நான்கு பெண்களுள் தாயும் மகளும் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவாசல் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இவ்வாறு இச்சூதாட்டம் இடம்பெற்றுள்ளது.
கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர். இதன் போது அங்கு சிலர் ஒன்று சேர்ந்த பணத்தைப் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டடிருந்த நான்கு பெண்கள் உட்பட எட்டுப் பேர் இதன் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு அவர்களுள் தாயும் மகளும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.