Saturday, May 16, 2015

Android, Windows மற்றும் iOS பாவித்து அலுத்துவிட்டதா? Firefox OS க்கு மாறுவோமா?

தற்போது அதிகரித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனாலும் Android, iOS, Windows போன்ற இயங்குதளங்களை மட்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வெறுப்படைந்துவிட்டது. 


இதனை நன்கு அறிந்துகொண்ட உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவிகளில் ஒன்றான Firefox இனை வடிவமைத்துள்ள Mozilla நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான இயங்குதளம் ஒன்றினையும்  உருவாக்கியுள்ளது. அதன் பெயர் Firefox_OS.

மேலும் Mozilla நிறுவனம் Firefox_OS இயங்குதளத்தை தனது Firefox உலாவியில் பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பையும் தற்பொழுது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கீழே படங்கள் மூலம் விளக்கியுள்ளேன். முயற்சி செய்து பாருங்கள் புது அனுபவமாக இருக்கும்.




                                                                                                                                                                                       

   
01. Firefox உலாவியினுடைய புதிய பதிப்பை தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் (Click Here to Download New Version of Firefox)





02. இப்பொழுது புதிதாக நிருவிய Firefox உலாவியை திறந்து அதில் www.google.com ஐ திறந்துகொள்ளுங்கள்.


03. அதில் "Firefox OS Simulator" என டைப் செய்து அதில் தோன்றும் முதலாவது linkஐ click பண்ணுங்கள். (கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாரு).



04. அடுத்து கீழே கட்டப்பட்டுள்ளவாரு ADD-ONS எனும் பக்கம் தோன்றும் அதில் Add to firefox என்பதை click செய்யவும். க்ளிக் செய்தவுடன் Firefox_OS இனுடைய செயலி Download ஆக ஆரம்பித்துவிடும்,



05. அடுத்து கீழே படத்தில் கட்டப்பட்டுள்ளவாரு அதை இன்ஸ்டால் செய்யவும்.



06. Install ஆகி முடிந்த பின் கீழே படத்தில் கட்டப்பட்டுள்ளவாரு
     Option > Web Developer > Firefox OS Simulator
       என்பதைClick செய்யவும். 


07. கீழே படத்தில் கட்டப்பட்டுள்ளவாரு ஒரு பக்கம் தோன்றும். அதில் STOPPED என்பதை click செய்யவும்.



08. அவ்வளவு தான் உங்களுடைய Firefox_OS திறை தோன்றிவிடும்.



முயற்சி செய்து பாருங்கள். பார்த்துவிட்டு உங்களுடைய Firefox_OS அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


ரிபாத் (விருதோடை)


Disqus Comments