கடந்த 2011ஆம் ஆண்டு எகிப்தில் இடம்பெற்ற சிறைத்தகர்ப்பு சம்பவம் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக்காலத்தின்போது இடம்பெற்ற கைதுகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் அவருக்கு ஏற்கனவே 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கு இந்த மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் எகிப்தின் மதத் தலைவர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற முர்சிக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அவரது பதவி இராணுவத்தினால் கவிழ்க்கப்பட்டது.
அன்றிலிருந்து அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.