முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை , இன்று 11 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசாலை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வாரத்தில் கோட்டாபய கைதாகலாமென தகவல்கள் கசிந்த நிலையில் ,அதனை உறுதி செய்யும் விதமாக அவர் இன்று திங்கட்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் கைதாகலாம் எனக் கூறப்படுகின்றது.
எவன்கார்ட் விவகாரமே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் இந்த விடயம் பற்றி விசரணையில் கேள்விகள் கேட்கப்படாதென தெரிகிறது. இதனால் கைது விவகாரத்தை முழுமையாக உறுதி செய்ய முடியாதுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளி யிட்டுள்ளது.