இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைகுழுவினால் வெளியிடப்படும் 2014/2015 கல்வியாண்டிற்கான விண்ணப்பம் அடங்கிய கையேடு 07ம் திகதி வெளியிடப்படுள்ள நிலையில்
இம்முறை பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பத்தை இணையத்திலும் சமர்ப்பிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து படிமுறைகளும் தெளிவாக அனுமதிக்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பத்தை இணையத்தில் நிரப்பமுன் (www.ugc.ac.lk) பல்கலைகழக மானியங்கள் ஆணைகுழுவின் இணையத்தலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு தேசிய அடையாள அட்டை(ஸ்கேன் செய்யப்பட்ட) மற்றும் மின்அஞ்சல் முகவரி அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது