ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து. தண்டனை ரத்தானதால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார். ஓரிரு நாளில் ஜெயலலிதா பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் கூடி ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்வர். இன்று அஷ்டமி, நாளை நவமி ஆனதால் புதன்கிழமை ஜெ. பதவி ஏற்க வாய்ப்புள்ளது. ஜெ. வழக்கில் நீதி வென்றதாக தமிழக அமைச்சர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.
ஜெ. வீட்டருகே அமைச்சர்கள்
ஜெ. விடுதலையை அடுத்து போயஸ் இல்லம் முன் தமிழக அமைச்சர்கள் திரண்டுள்ளனர். வருமானம் தொடர்பான ஜெ. தரப்பு வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்றார். ஜெ. தரப்பு வாதத்தை ஏற்று வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.
ஜெ. வின் சொத்து விடுவிப்பு
முடக்கப்பட்ட ஜெ. வின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம் கொண்டுள்ளனர்.
டெல்லியில் அதிமுக கொண்டாட்டம்
டெல்லி நாடாளுமன்றம் அருகே அதிமுக எம்.பி.க்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஜெ. தண்டனை ரத்து
ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
வழக்கு விவரம்
வருமானத்துக்கு அதிகமான ஜெ. ரூ. 66 கோடி சொத்து குவித்ததாக 1991 - 1996-ல் ஜெ. முதல்வராக இருந்த போது சொத்துக்குவிப்பு என்பது குற்றச்சாட்டு எழுந்தது. ஜெயலலிதா உடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 4 பேர் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். தமிழகத்தில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கு 2003-ல் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஜெ. உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 18 ஆண்டுகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதும் கர்நாடக தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்ஹா, 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.கடைசியாக வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ல் தீர்ப்பளித்தார்.
வழக்கறிஞர் ஆச்சார்யா விளக்கம்
ஜெ. குற்றவாளி என்பதற்கான ஆதாரம் ஆவணங்களாகவே தாக்கல் என ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஆவணங்களை ஆய்வு செய்தே நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். குன்ஹா தீர்ப்பை ரத்து செய்து 900 பக்கங்களில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 900 பக்கங்களையும் படித்து பார்த்த பின்பே தீர்ப்பு குறித்து கருத்து கூற முடியும் என ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு வாதத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளித்தது. ஒரு நாளில் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்வது எளிதான காரியம் அல்ல மேலும் குற்றம்சாட்டப்பட்டோர் வாதங்களை முன் வைக்க 2 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது என ஆச்சார்யா கூறியுள்ளார்.