Monday, May 11, 2015

ஞானசாரவை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொது பல சேனா பயங்கரவாத் இயக்கத்தின் பொது செயலாளரான பயங்கரவாதி ஞாசாரவை அவர் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவ மீறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை சம்பந்தமாக 27 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும் அந்த 27 பேரில் 26 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதும் ஞானசார ஆஜராகியிருக்கவில்லை.

இதன் காரணமாக ஞானசாரவை நாடு திரும்பும் வழியில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு நீதிமன்றம் தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Disqus Comments