பாலாவி புளுதிவயலில் வதியும் பாத்திமா சாமிலா (19 வயது) மற்றும் அவரது குழந்தை பாத்திமா பர்ஜா (3 1/2வயது) ஆகிய இருவரையும் 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து காணவில்லை என புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக கூறப்படும் பாத்திமா சாமிலாவின் கணவரும், குழந்தையின் தந்தையுமான முஹம்மது பர்ஹான் என்பவராலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாத்திமா சாமிலா இறுதியாக கறுப்பு நிற அபாயாவும், குழந்தை பச்சை நிற சட்டையும், ரோஸ் நிறத்திலான நீள் காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை யாரை கண்டாலும் சிறந்த முறையில் உரையாடக்கூடியவர்.
கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த தனது மனைவி தனக்கு தெரியாமல் பள்ளிவாசல்களின் வாயில்களில் இரவல் கேட்டு வந்துள்ளதாகவும் குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு அருகில் பொது மக்கள் அவதானம் செலுத்துமாறும் அவரது கணவர் பொது மக்களை கேட்டுக்கொள்கிறார்.
இவர்களை கண்டவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது 0728198041 , 0724290160 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பை ஏற்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.