Tuesday, May 19, 2015

இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளது


இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும், அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெனிஸ் வோர்கர் நெவில் கூன் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கூறினார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவிஸ் நாட்டின் உயர் மட்ட குழுவினருக்கும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம் பெற்ற வர்த்தக மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலின் போது இதனை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தூதுக்குழுவுக்கு இலங்கை அரசும் சுவிஸ்லாந்து அரசும் செய்துளள்ள வர்த்தக இரு தரப்பு உடன்படிக்கை சம்பந்தமாக விளக்கமளித்தார்.

சுவிட்ஸ்லாந்து அரசு இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது குறிப்பிட்டார். அதே வேளை இரு தரப்பு உடன்படிக்கை தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Disqus Comments