தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ் மற்றும் மெமோரி கார்ட்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் தான். வெவ்வேறான கணணிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக இந்த சாதனங்களில் புகுந்து உள்ளே இருக்கும் கோப்புகளை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் அல்லது மெமோரி கார்டில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும். கணணியில் பென்டிரைவை ஓபன் செய்தால் முன்பு நாம் வைத்திருந்த எந்த கோப்புகளும் இருக்காது. காலியாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தல் கோப்புகள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் கோப்புகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே.
பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருப்பின் அந்த கோப்புகளை மீண்டும் பத்திரமாக பெற முடியுமா? ஆம் இலகுவாக நீங்களே அதை மீண்டு கொண்டு வர முடியும்.
இதற்காக பிரத்தியோகமாக எந்த மென்பொருளையும் கணணியில் நிருவ வேண்டியதில்லை. உங்கள் கணணியிலேயே சுலபமாக செய்து விடலாம்.
1. முதலில் பென்டிரைவை உங்கள் கணணியில் சொருகி கொள்ளுங்கள்.
2. அடுத்து உங்கள் கணினியில் RUN எனும் applicationஐ திறந்துகொள்ளுங்கள். (Start ==> Run or Windows key + R)
3. அதில் CMD என டைப் செய்து Enter கொடுக்கவும். (விண்டோஸ் 7 இற்கு பின்னைய பதிப்பை பயன்படுத்துவோர் ஸ்டார்ட் மேனுவிலேயே CMD என டைப் செய்து Enter அழுத்தினால் Command Prompt திறந்துவிடும்)
4. இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறிய முடியும். (உதாரணத்துக்கு நாங்கள் இங்கு D: என எடுத்துக்கொள்வோம்.)
5. இப்பொழுது Command Prompt இல் D: என கொடுத்து Enter அழுத்தவும்.
6. கடைசியாக attrib -s -h /s /d *.* என டைப் செய்து (இதை copy பன்னி paste பண்ணினாலும் பரவாயில்லை) Enter அழுத்திவிட்டு சில வினாடிகள் பொறுத்திருங்கள்.
(attrib -s -h /s /d *.*)
இப்பொழுது உங்கள் Pen Driveஐ அல்லது Memory Cardஐ சோதித்து பாருங்கள் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் பத்திரமாக மீண்டும் வந்திருக்கும்.
நன்றி
ரிபாத் (விருதோடை)