(Muhammad Muhsi)||| கடந்த நான்கு வருடங்களாக புத்தளம் முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரியாக பணியாற்றும் நண்பர் B.M. ஹிஷாம் இது வரைக்கும் இரவு பகல் என்று பாராது சுமார் 350 ஜனாசாக்களை உரிய முறையில் கையாண்டு, முடிந்தவரை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகிறார். அல்ஹம்துளில்லாஹ். அன்னாருக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக.
கொலையை கட்டாயம் பிரேதப் பரிசோதனை (Postmortem) செய்ய வேண்டும். அது போல விபத்து, தற்கொலை, பிள்ளை பேறின் போது குழந்தை இறத்தல் அல்லது தாய் இறத்தல் அல்லது இருவரும் இறத்தல் முதலான சந்தர்ப்பங்களிலும் பிரேதப் பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. இதேவேளை நீரில் மூழ்குதல் முதலானவற்றில் சந்தேகம் ஏற்படினும் பிரேதப் பரிசோதனை இடம் பெற வேண்டும் என்ற நிலை கூட ஏற்படலாம் என்று அவர் தெரிவிக்கிறார்.
வேறு எங்கும் இல்லாத நிலையில் இரவு வேளையில் அவர் கையாளும் ஜனாசாக்களை கூடஒருவாறு விரைவாக வைத்தியசாலையில் இருந்து விடுவித்து கொடுக்கும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் கடந்த ஒரு மாதமாக முக்கிய விடயமொன்றை தெரிவித்து வருகிறார். அதுதான் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சகல ஜனாசாக்களையும் பிரதே பரிசோதனை செய்து தான் வழங்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறி வருவதாகவும், அதனால் தான் அதை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதாவும் தெரிவிக்கிறார்.
இந்த நிலையை புரிந்துணர்வு அடிப்படையில் சீர் செய்து தருமாறும் அவர் சமூகத்தின் சகல தரப்பாரிடமும் கோரிக்கை விடுக்கிறார். அது சாத்தியமாகவில்லை என்றால் திடீர் மரண விசாரணை அதிகாரி எனும் அடிப்படையில் தான் கையாளும் முஸ்லிம் ஜானாசாக்களின் பிரேத பரிசோதனையின் (Postmortem) போது அவற்றைக் கீறி கொடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.