எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு சிறுவனத்தின் மண்சரிவு அபாய மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர் எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குறித்த பகுதிகளில் மழை குறைவடைந்துள்ள போதிலும் கடந்த மூன்று தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது சிறிய அளவில் மழை பெய்வதாலும், தொடர்ந்தும் மழையுடனான வானிலைக் காரணமாகவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்ட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.