Friday, May 20, 2016

வெள்ளப்பெருக்கினால் 62 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 லட்சம் பேர் இடம்பெயர்வு


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் 62,000 குடும்பங்களைச் சேர்ந்த 300,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்காக 611 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரையில் சுமார் 3500 வீடுகள் முழுமையாகவோ பகுதியளவோ சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதோடு 132 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. 
Disqus Comments