மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவொன்று மீ்ண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக ஒரு வான் கதவை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் மேலும் மழை தொடருமாயின் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு தானாகவே திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(அத தெரண தமிழ்)