Monday, May 23, 2016

வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள் - சஜித் பிரேதமாச


அரநாயக்க மற்றும் புலத்கொஹூபிடிய ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்த வேலைத்திட்டம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 
Disqus Comments