Wednesday, May 18, 2016

களனி கங்கையில் நீர் அதிகரிக்கிறது. அருகில் இருப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர ஆலோசனை

பல பிரதேசங்களில் மிக் கம்பிகள் விழுந்திருப்பதனால் கொலன்னாவ பிரதேசத்தில் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார தனியார் நிறுவனம் கூறியுள்ளது. 


மின் கம்பிகள் கீழே விழுந்திருப்பதனால் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அதன்படி, சீதுவ, ஒருகொடவத்தை, வென்னவத்தை, மீதொட்டமுல்ல, சேதவத்தை, ஒருகொடவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 



இவேளை களனி கங்கையின் நீர்மட்டம் தற்சமயம் அதிகரித்துக் கொண்டிருப்பதனால் ஆற்றின் இரு பக்கமும் வசிக்கும் மக்கள் மிகவும்அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 



தாழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது சிறந்தது என்று அந்த நிலையம் கூறியுள்ளது. 
Disqus Comments