(TM -ரஸீன் ரஸ்மின்) தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் புத்தளம் மாவட்டத்திலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி, தெரிவித்தார்.
தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதனால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தம்போவ குளத்தின் 14 வான் கதவுகளும் ராஜாங்கன குளத்தின் 24 வான் கதவுகளும், இங்கினிமிட்டிய குளத்தின் 06 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் உள்ள குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளதால் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.