Wednesday, May 18, 2016

நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து


இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் அரச சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார். 

அனர்த்தம் காரணமாக எற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் சீராகும் வரை இந்த நடைமுறை அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார். 

நிவாரண சேவை நடவடிக்கைகளின் போது உள்துறை அமைச்சினால் சரியான முறையில் சேவை இடம்பெறாவிட்டால் 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசேனைப்படி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். 

(அத தெரண தமிழ்)
Disqus Comments