(Hisham Hussain) புத்தளம் பெருநகர் எனக் கூறுவதற்கான அடையாளங்கள் முழுமையாகவும் இல்லாத, கிராமத்தின் அடையாளங்களுக்கு முற்றாகவும் விடைகொடுக்காத ஒரு வளர்முக நகரம்.
எனினும் இந் நகரத்தில் நான்கு, ஐந்து சொப்ட்வெயார் உற்பத்தி நிறுவனங்கள் (நான் அறிந்தவரை) உள்ளமை சற்று வியப்புக்குரியதாக இருக்கலாம்.
அந்த வகையில், Imara Software Solutions 2009-ம் ஆண்டு ஓரிரு வாலிபர்களினால் உருவாக்கப்பட்டு, இன்று 15 பேர் வரை நிரந்தர ஊழியர்களாக கடமையாற்றும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு.
Imara-வின் சேவைப் பெறுனர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இவ் ஊழியர் தொகை போதாத காரணத்தினால், அது சார்ந்த கல்வியையும் ஊட்டி தொழிலையும் வழங்க வேண்டிய நிலைக்கு இந் நிறுவனம் முன்னேறியுள்ளது. இது Imara உற்பத்திகளின் நேர்த்திக்குக் கிடைத்த விருது எனலாம்.
ஒரு பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கான அளவுகோலாக அங்கு வாழும் மக்களின் துறைசார் வளர்ச்சியைக் கருதுவோமாயின், புத்தளத்தின் மிகப் பெறும் அபிவிருத்தியாக Imara போன்ற தொழில் கல்வி வழங்கும் தனியார் நிறுவனங்களையும் ஏனைய தொழில் வழங்குனர்களையும் கோடிட்டுக் காட்ட முடியும், இன்ஷாஅல்லாஹ்